துபாய் மொத்தமாக அழியும்… எச்சரிக்கும் முன்னணி பொருளாதார நிபுணர்
அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக ஈரானுக்கு எதிரான போரில் ஐக்கிய அரபு அமீரகம் சேருவதற்கு எதிராக முன்னணிப் பொருளாதார நிபுணர் ஜெஃப்ரி சாக்ஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தகர்க்கப்படலாம்
சுற்றுலாத் தலங்களாக வடிவமைக்கப்பட்டுள்ள துபாய் மற்றும் அபுதாபிக்கு உடனடி ஆபத்து அதிகம் என்றே அவர் குறிப்பிட்டுள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கூட்டணி அமைப்பதன் மூலம் ஐக்கிய அரபு அமீரகம் ஒரு அபத்தமான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளதாகவும், தனது தவறுகளைத் தொடர்ந்து இரட்டிப்பாக்கி வருவதாகவும் சாக்ஸ் வாதிட்டுள்ளார்.
அடிப்படையில், ஐக்கிய அரபு அமீரகம் போரில் இறங்கினால் துபாயும் அபுதாபியும் தகர்க்கப்படலாம். இவை ஓய்விடப் பகுதிகள். இவை சுற்றுலாத் தலங்கள். இவை பலப்படுத்தப்பட்ட ஏவுகணைப் பாதுகாப்புப் பகுதிகள் அல்ல எனவும் சாக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மட்டுமின்றி, போருக்குள் நுழைவது என்பது துபாய் போன்ற ஒரு மாகாணத்தின் முழு நோக்கத்தையுமே தோற்கடிப்பதாகும். அமீரகம் கண் திறந்தபடியே ஒரு அபத்தமான சிக்கலில் மாட்டிக்கொண்டுள்ளது என்றார்.
தவறான கணிப்பு
மேலும், ஆபிரகாம் உடன்பாட்டின் ஊடாக வளைகுடா நாடுகள் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் கூட்டு சேர எடுத்த முடிவை சாக்ஸ் ஒரு பேரழிவிற்கான அழைப்பாகவே குறிப்பிட்டுள்ளார்.

அது வளைகுடா நாடுகளை அமெரிக்கப் பாதுகாப்பை மேலும் சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளியது என்றார். இதனால், வளைகுடா முழுவதும் அமெரிக்க இராணுவத் தளங்கள் அமைந்தன, அமெரிக்கா தங்களுக்கு பாதுகாப்பளிக்கும் என்றும் வளைகுடா நாடுகள் முழுமையாக நம்பின, ஆனால் தற்போது அவை அனைத்தும் அடிப்படையிலேயே தவறான கணிப்பு என அம்பலமாகியுள்ளது என்றார்.

You must be logged in to post a comment.