“மனதை விட்டு அகலாத புத்தாண்டு” (Nostalgic Avurudu) நிகழ்வுடன் கிராமத்து உணர்வை நகரத்திற்கு கொண்டு வரும் ஹவ்லொக் சிட்டி
கொழும்பு, இலங்கை: ஹவ்லொக் சிட்டி வர்த்தக மையம், “மனதை விட்டு அகலாத புத்தாண்டு” என்ற தனது தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுப் பண்டிகை நிகழ்வை ஆரம்பித்துள்ளது. மார்ச் 21 முதல் ஏப்ரல் 12 வரை இடம்பெறும் இந்த ஊக்குவிப்பு நிகழ்வில் பாரம்பரிய கலாச்சாரக் கொண்டாட்டங்கள் மற்றும் சமூக ஈடுபாட்டுக்காக தயார்ப்படுத்தப்பட்ட நிகழ்ச்சிநிரலின் மூலமாக விற்பனை மையங்கள் மட்டங்களில் விற்பனை ஊக்குவிப்பு நடவடிக்கைகள் இதில் அடங்கியுள்ளன.
வர்த்தக மையத்தினுள் பாரம்பரிய புத்தாண்டுக் கிராமம் அமைக்கப்பட்டுள்ளமை இந்நிகழ்வின் மையப்புள்ளியாகும். நகரச்சூழலிலேயே கிராமப் பாணியிலான புத்தாண்டுப் பாரம்பரியங்களை நகரத்தில் உள்ளவர்கள் அனுபவிப்பதற்கு உதவும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இம்முயற்சி, கொழும்பைத் தளமாகக் கொண்ட குடும்பங்கள் பரபரப்பு நிறைந்த தமது வாழ்வியலுக்கு மத்தியில் இப்பண்டிகையின் முழுமையான பாரம்பரியங்களை அனுபவிப்பதற்கான அரிய வாய்ப்பினை வழங்குகின்றது.
Avurudu Waasi என்ற ஊக்குவிப்பில் பங்குபற்றும் விற்பனை வர்த்தகநாமங்கள் மத்தியில் பிரத்தியேக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை மார்ச் 21 முதல் ஏப்ரல் 12 வரை பெற்றுக்கொள்ள முடியும். Avurudu Wasana ஊக்குவிப்பு நிகழ்வானது மார்ச் 24 முதல் ஏப்ரல் 12 வரை இடம்பெறவுள்ளதுடன், கொள்வனவாளர்கள் வியப்பூட்டும் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்கும் பிரத்தியேகமான பரிசு வழங்கல் முயற்சியாகும். இக்கொண்டாட்டங்களின் தொடர்ச்சியாக ஏப்ரல் 4 மற்றும் 5 ஆகிய தினங்களில் Avurudu Ulela மற்றும் விளையாட்டுக்கள் இடம்பெறவுள்ளதுடன், பாரம்பரிய புத்தாண்டு விளையாட்டுக்களின் விறுவிறுப்பை பொது இடத்தில் ஒன்றுகூடும் கொள்வனவாளர்கள் கொண்டாடுவதற்கு வாய்ப்பளிக்கின்றது.
இப்பண்டிகைக் கொண்டாட்டங்களின் நிறைவாக ஏப்ரல் 6 முதல் 12 வரை Avurudu Kadamandiya நிகழ்வு இடம்பெறவுள்ளது. கைவினைக்கலை தயாரிப்புக்கள், புத்தாண்டு இனிப்புப் பலகாரங்கள், மற்றும் பண்டிகைக்கால பிரபல தெரிவுகளுடன் உள்ளூர் கைவினைக்கலை மற்றும் சுவை வடிவங்களின் சிறப்பினை எடுத்துக்காட்டுவதுடன், உள்ளூர் உற்பத்தியாளர்கள் மற்றும் சிறு வணிகர்கள் பண்டிகைக்காலத்தில் மும்முரமாக வியாபாரம் நடைபெறும் இடமொன்றில் தமது தயாரிப்புக்களை காட்சிப்படுத்தி, விற்பனைகளை மேற்கொள்வதற்கு வாய்ப்புக் கிடைக்கின்றது.
“மனதை விட்டு அகலாத புத்தாண்டு” மூலமாக, வர்த்தகம் என்பதற்கும் அப்பால், முதன்மையான வாழ்வியல் சார்ந்த இடம் என்ற தனது ஸ்தானத்தை ஹவ்லொக் சிட்டி வர்த்தக மையம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. புத்தாண்டுக் காலப்பகுதியில் கொள்வனவாளர்கள், வர்த்தகக் கூட்டாளர்கள், மற்றும் உள்ளூர் தொழில் முயற்சியாளர்களுக்கு கலாச்சார ரீதியாக பொருத்தமான அனுபவங்களையும், பண்டிகைக்கால மதிப்பையும் தோற்றுவிக்கின்றது.

You must be logged in to post a comment.