முட்டாள் அமெரிக்கர்கள் என்னை எதிர்க்கின்றனர்! டிரம்ப் தெரிவிப்பு!!
அமெரிக்காவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சனம் செய்பவர்களை “முட்டாள்கள்” என அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.
அமெரிக்காவை மீண்டும் வலிமையான நாடாக மாற்றுவதற்கான தனது முயற்சிகளை ஒருசிலர் உள்நோக்கத்துடன் எதிர்ப்பதாகக் குறிப்பிட்ட அவர், குறிப்பாக வரிக் கொள்கைகள் மற்றும் தற்போதைய வெளியுறவுக் கொள்கைகளால் அமெரிக்கா பெரும் பலன் அடைந்து வருவதாக வாதிட்டார்.
“அமெரிக்காவின் வளர்ச்சியைப் பிடிக்காத ஒருசில முட்டாள்கள் எனது செயல்பாடுகளை எதிர்க்கிறார்கள். ஆனால் உண்மை என்னவென்றால், நமது நாடு முன்னெப்போதும் இல்லாத வகையில் தற்போது மதிக்கப்படுகிறது,” என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

You must be logged in to post a comment.