Local

துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 18 வயது இளைஞனின் காலை அகற்றும் நிலை!

ரம்புக்கன்ன பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் மருத்துவர் வாசன் ரட்ணசிங்கம் தெரிவித்தார். தெரிவித்தனர்.

துப்பாக்கிச் சூட்டில் மூவர் உயிரிழந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவிவரும் தகவல் குறித்து கேட்டபோது அவர் இதனைத் தெரிவித்தார்.

எனினும் சிகிச்சை பெற்றுவருவோரில் மூவர் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் இந்த சம்பவத்தில் 38 பேர் காயமடைந்துள்ளதாகவும் இவர்களில் 15 பொலிஸாரும் 20 பொதுமக்களும் அடங்குவதாகவும் அந்த சங்கத்தின் மருத்துவர் வாசன் தெரிவித்தார்.

சிகிச்சை பெற்றுவரும் 18வ வயது இளைஞனின் கால் ஒன்று அகற்ற வேண்டிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அத்துடன் போராட்டத்தில் வன்முறை பிரயோகிக்கப்பட்டதை வன்மையாக கண்டிப்பதாக மருத்துவர் வாசன் தெரிவித்தார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading