World

தென்கொரியா விமான விபத்து… 179 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

தென்கொரியாவில் உள்ள முவான் விமான நிலையில் விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 179 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தென்கொரியாவில் இடம்பெற்ற விமான விபத்து... 179 பேர் பரிதாபமாக உயிரிழப்பு! | South Korea Flight Crach 179 Peoples Deaths

பாங்காக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் உள்ள முவான் விமான நிலையத்திற்கு இன்றையதினம் (29-12-2024) விமானம் வந்துள்ளது.

இதேவேளை, முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோது விமானத்தின் லேண்டிங் கியரில் கோளாறு ஏற்பட்டதால் தரையிறங்கத்தின் போது விமானம் வெடித்து சிதறியது விபத்துக்குள்ளாகியுள்ளது.

இந்த விபத்து 85 பேர் முதற்கட்டமாக உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் தற்போது 179 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading