Local

தெற்காசியாவின் மிகப்பெரிய சிறுநீரக வைத்தியசாலை திறப்பு!

சீனா அரசின் உதவியுடன் பொலன்னறுவையில் நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் பாரிய சிறுநீரக வைத்தியசாலையான தேசிய சிறுநீரகவியல் சிறப்பு மருத்துவமனை இன்று (11) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.

இதில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இலங்கைக்கான சீனத் தூதுவர் உள்ளிட்ட பிரமுகர்கள் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

2015 ஆம் ஆண்டு சீனாவிற்கு விஜயம் மேற்கொண்டிந்த அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுத்த வேண்டுகோளுக்கு அமைய சீன அரசாங்கத்தினால் இந்த வைத்தியசாலை நிர்மாணிக்கப்பட்டது.

இந்த வைத்தியசாலையில் 200 கட்டில்களும் இரத்த மாற்று சிகிச்சைகளுக்காக 100 கட்டில்களும் சிறுநீரகம் பொருத்தும் சத்திர சிகிச்சை கூடமும் 2 தீவிர சிகிச்சைப் பிரிவுகளும் உள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading