Local

தேங்காய் திருட சென்றவர் மீது துப்பாக்கிச் சூடு

கால்நடை அபிவிருத்தி சபைக்கு சொந்தமான தோட்டமொன்றில் தேங்காய் திருட சென்ற நபர் மீது துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

குறித்த தோட்டத்தின் காவலாளியே துப்பாக்கிச் சூடு நடத்தியதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் குளியாபிட்டிய போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பன்னல பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று (01) மாலை 5.20 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

யக்வில – ஹகவா பகுதியைச் சேர்ந்த ஒருவரே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்துள்ளார்.

தேங்காய் திருட சென்ற போது தோட்ட காவலாளி துப்பாக்கியால் சுட்டதாக காயமடைந்த நபர் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதில் இடது கை மற்றும் இடுப்பு பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்திய காவலர் இதுவரை கைது செய்யப்படாத நிலையில், பன்னல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading