Sports

தோனி படைத்த பிரமாண்ட சாதனை

2024 ஐபிஎல் தொடரில், ஆடி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மூத்த வீரர் தோனி (42) ஐபிஎல் வரலாற்றில் வேறு எந்த விக்கெட் காப்பாளரும் செய்யாத மாபெரும் சாதனையை புரிந்துள்ளார்.

நேற்று (19) நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனி 9 பந்துகளில் 28 ஓட்டங்கள் குவித்து சிஎஸ்கே அணியின் ஸ்கோர் 170 ஓட்டங்களை கடக்க முக்கிய காரணமாக இருந்தார்.

அவர் இந்தப் போட்டியில் விக்கெட் காப்பாளர் – துடுப்பாட்டவீரராக 5000 ஓட்டங்களை கடந்து புதிய மைல்கல் சாதனை படைத்தார்.

தோனி படைத்த பிரமாண்ட சாதனை | Dhonis Great Achievement

ஐபிஎல் தொடரில் இதுவரை வேறு எந்த விக்கெட் காப்பாளரும் இந்த மைல்கல்லை தொடவில்லை.

257 ஐபிஎல் போட்டிகளில் ஆடி உள்ள தோனி 5169 ஓட்டங்கள் குவித்துள்ளார். இதில் சில போட்டிகளில் அவர் விக்கெட் காப்பாளராக செயல்படவில்லை. அந்த வகையில் விக்கெட் காப்பாளராக ஆடிய போட்டிகளில் மட்டும் அவர் 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை கடந்து இருக்கிறார்.

தோனி படைத்த பிரமாண்ட சாதனை | Dhonis Great Achievement

தோனியை தவிர வேறு எந்த விக்கெட் காப்பாளரும் 200 ஐபிஎல் போட்டிகளுக்கு மேல் ஆடவில்லை. அதனாலேயே அவர்கள் யாராலும் 5000 ஓட்டங்கள் என்ற மைல்கல்லை எட்ட முடியவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading