Gossip

நடத்தையில் சந்தேகம் மனைவியின் மூக்கை கடித்து துப்பிய கணவன்!

உத்தரபிரதேச மாநிலம் பஹ்ரைச் அடுத்த பெத்னாபூர் மின் துறையில் ரஜினி தேவி (26) என்ற பெண் பணியாற்றி வருகிறார். இவரது நடத்தையில் சந்தேகமடைந்த கணவர் ஞானதத்தா பதக், தனது மனைவியுடன் அடிக்கடி தகராறு செய்துவந்தார். இதனால் கோபமடைந்த ரஜினி தேவி, தனது பெற்றோர் வீட்டிற்கு கோபித்துக் கொண்டு சென்றுவிட்டார். சில நாட்கள் கழித்து, தனது மனைவியை அழைத்து வருவதற்காக மாமனார் வீட்டிற்கு ஞானதத்தா பதக் சென்றார்.

அங்கு சமாதான பேச்சுவார்த்தை நடத்தி தனது மனைவியை வீட்டிற்கு அழைத்து வந்தார். வரும் வழியில், ஞானதத்தாவின் நண்பர்கள் இருவர் நின்றிருந்தனர். ஏற்கனவே திட்டமிட்டபடி, ரஜினி தேவியை மூவரும் சேர்ந்து தாக்கினர். பின்னர், தனது மனைவி ரஜினி தேவியின் மூக்கை கணவர் ஞானதத்தா பதக் கடித்து துப்பினார். பின்னர் ரத்தம் சொட்ட சொட்ட, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவ்விவகாரம் தொடர்பாக போண்டி போலீசார் வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading