Cinema

அன்று தற்கொலை செய்ய நினைத்த நடிகை இன்று நிறைமாத கர்ப்பிணி!

ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம்வரும் நமீதாவின் வளைகாப்பு புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

2004-ம் ஆண்டு வெளியான எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நமீதா, முதல் படத்திலேயே ரசிகர்களின் கனவுக் கன்னியாக வலம் வந்தார்.

விஜய், அஜித் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த நமீதா, கவர்ச்சி நடிகையாகவும் வலம் வந்த இவர், பின்பு உடல் எடை அதிகரித்ததால் படவாய்ப்பு இல்லாமல் போன நிலையில், சினிமாவில் இருந்து ஒதுங்கினார்.

காதலனுடன் திருமணம்
நடிகை நமீதா கடந்த 2017ம் ஆண்டு தன்னுடைய நீண்ட கால நண்பரும், காதலருமான வீரேந்திர சவுத்ரி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இந்நிலையில் திருமணமாகி 5 ஆண்டுகள் கழிந்து, தற்போது தான் கர்ப்பமாக இருக்கும் நிலையில், குறித்த விடயத்தை கடந்த சில வாரங்களுக்கு முன்பு ரசிகர்களுக்கு அறிவித்தார்.

மேலும் கணவருடன் ரொமான்ஸ் புகைப்படங்கள் எடுத்தும் வெளியிட்டிருந்தார். இந்நிலையில் இன்று இவருக்கு வளைகாப்பு நடைபெற்றுள்ள நிலையில் குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தற்கொலை செய்து கொள்ள நினைத்த நமீதா
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தன் உடலில் இருக்கும் பிரச்னைக் குறித்து உருக்கமான பதிவு ஒன்றை போட்டு இருந்தார் நமீதா.

அதில் ‘10 வருடத்திற்கு முன் தான் அதிகம் சாப்பிடும் சாப்பிட்ட தாகவும் இதனால் தன்னுடைய எடை 97 கிலோ வரை இருந்ததால் கடுமையான மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறியிருந்தார்.

மேலும், பலரும் எனக்கு குடிப்பழக்கம் இருப்பதாகவும் அதான் இப்படி குண்டாக இருப்பதாக கூறினார்கள். உண்மையில் எனக்கு மாதவிடாய் பிரச்சனையும் தைராய்டு நோயும் இருந்தது. ஓர் கட்டத்தில் தற்கொலை செய்து கொள்ளலாம் என்று கூட எண்ணம் வந்து அதிலிருந்து கடவுள் அருளால் மீண்டதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading