நடிகர் அஜித் மற்றும் விஜய் அதிக சம்பளம் வாங்குவதற்கு எதிர்ப்பு!

அஜித் மற்றும் விஜய் படத்தின் பட்ஜெட்டில் 90 சதவிகிதத்தை சம்பளமாக வாங்குவதற்கு நடிகர் அருண்பாண்டியன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கருணாஸ் நடித்துள்ள ஆதார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் இயக்குனர் பாரதிராஜா, இசையமைப்பாளர் தேவா, நடிகர் அருண்பாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றனர். அப்போது பேசிய இயக்குநர் சரவணன் தமிழ் சினிமாவுக்கு தற்போது பொற்காலம் என்று கூறினார். அவரது கருத்துக்கு மறுப்பு தெரிவித்த நடிகர் அருண்பாண்டியன் தமிழ் சினிமாவின் பொற்காலம் என்பது இயக்குநர் பாரதிராஜா இருக்கும்போதும், நாங்கள் இருந்த காலம்தான் என்றார். ஆனால் இப்போது அப்படி இல்லை என்பதை என்னால் அழுத்தம் திருத்தமாக சொல்ல முடியும். இன்றைக்கு வேற்று மொழி படங்கள் தமிழ்நாட்டில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. https://googleads.g.doubleclick.net/pagead/ads?client=ca-pub-9309199409784490&output=html&h=343&adk=1564593968&adf=2311946703&pi=t.aa~a.1729181913~i.1~rp.4&w=412&lmt=1650120067&num_ads=1&rafmt=1&armr=3&sem=mc&pwprc=2506020519&psa=1&ad_type=text_image&format=412×343&url=https%3A%2F%2Fwww.kumudam.com%2Fnews%2Fcinema%2F42667&fwr=1&pra=3&rh=335&rw=402&rpe=1&resp_fmts=3&sfro=1&wgl=1&fa=27&dt=1650120067483&bpp=23&bdt=5032&idt=24&shv=r20220413&mjsv=m202204120101&ptt=9&saldr=aa&abxe=1&cookie=ID%3Db1bdb8e691f5be12-22d0c65711cb009f%3AT%3D1629634256%3ART%3D1629634256%3AS%3DALNI_MaclHQD7dh-j53RXzjJtWSurBSpHA&prev_fmts=0x0&nras=2&correlator=8159148619569&frm=20&pv=1&ga_vid=708734233.1629634257&ga_sid=1650120066&ga_hid=884571331&ga_fc=1&u_tz=330&u_his=1&u_h=915&u_w=412&u_ah=915&u_aw=412&u_cd=24&u_sd=1.75&dmc=2&adx=0&ady=1255&biw=412&bih=787&scr_x=0&scr_y=0&eid=44759875%2C44759926%2C44759842%2C31067098%2C31061828%2C31060475&oid=2&pvsid=474890502551231&pem=340&tmod=1038653951&uas=0&nvt=1&ref=http%3A%2F%2Fm.facebook.com%2F&eae=0&fc=1408&brdim=0%2C0%2C0%2C0%2C412%2C0%2C412%2C787%2C412%2C787&vis=1&rsz=%7C%7Cs%7C&abl=NS&fu=1152&bc=31&ifi=2&uci=a!2&btvi=1&fsb=1&xpc=BmfxUGVlBB&p=https%3A//www.kumudam.com&dtd=114
தற்போது வெளிவரும் நடிகர்கள் அஜித் மற்றும் விஜய் படங்கள் சினிமாவிற்கு செலவு செய்யவில்லை. தனக்கு செலவு செய்கிறார்கள். 90 சதவிகிதம் சம்பளத்தை அவர்களே வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும். கண்டிப்பாக எடுக்க முடியாது. அதனால் அஜித், விஜய் அதிகம் சம்பளம் வாங்குவதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏனென்றால் நாங்கள் படம் எடுக்கும் போது 10 சதவிகிதம் தான் சம்பளம் வாங்குவோம். மீதமுள்ள 90 சதவிகிதம் படத்திற்கு செலவு செய்யப்படும். அப்படி இருந்தால் தான் நாம் வேற மொழி படத்துடன் ஒப்பிட முடியும். அன்றைய காலத்தில் நாம் கதையில் ஜெயித்தோம். ஆனால் தற்போது தமிழ் சினிமா எல்லா விஷயத்திலும் பின்தங்கி இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
