Cinema

நடிகர் கமலுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், மனீஷா கொய்ராலா, ஊர்மிளா மடோன்கர் உட்பட பலர் நடித்து 1996-ம் ஆண்டு வெளியான படம், ‘இந்தியன்’. இந்தப் படத்தின் 2ம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. இதில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர் உட்பட பலர் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இப்போது நடந்து வருகிறது. இதில் முக்கிய வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ளார். இந்த தகவலை ரகசியமாக வைத்திருந்தனர். இப்போது வெளியே கசிந்துள்ளது. ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் ஹீரோவாக நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படத்திலும் எஸ்.ஜே.சூர்யா வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading