Local

நடிகர் சரத்பாபு உயிரிழந்த செய்தி பொய்யானது என குடும்ப உறுப்பினர்கள் தெரிவிப்பு!

இந்திய நடிகர் சரத்பாபு காலமானதாக வெளியான செய்தி உண்மைக்கு புறம்பானது என அவரது சகோதரி தெரிவித்துள்ளதாக ரைம்ஸ் ஒப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

நடிகர் சரத்பாபு, தனது 71வது வயதில் காலமானதாக தமிழக செய்தி தொலைக்காட்சிகள் சற்று முன்னர் செய்தி வெளியிட்டிருந்தன.

எனினும், அந்த செய்தி போலியானது என சரத்பாபுவின் சகோதரி தெரிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக உடல்நல குறைவால் ஹத்ராபாத்தில் உள்ள வைத்தியசாலையில் சரத்பாபு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

சரத் பாபு உயிரிழந்ததாக வெளியான தகவலை அடுத்து, நடிகை குஷ்பு சுந்தர் உள்ளிட்ட பலரும் இரங்கல் வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading