Cinema

நடிகர் தனுஷின் முன்னாள் மனைவிக்கு கொரோனா!

தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்து வந்நதது. இந்த நிலையில் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது.

இருந்த போதிலும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் மூத்த மகளும், நடிகர் தனுஷின் முன்னாள் மனைவியுமான ஐஸ்வர்யாவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானதை தொடர்ந்து, வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். மேலும், தன்னுடன் தொடர்பில் இருந்த அனைவரும் தனிமைப் படுத்திக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading