Cinema

நடிகர் தனுஷை டுவிட்டரில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியது!

நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது.
நடிகர் தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சமீபத்தில் ஜகமே தந்திரம் படம் வெளியானது. இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.  
இதையடுத்து, நடிகர் தனுஷ், ஆனந்த் எல்.ராய் இயக்கத்தில் இந்தியில் நடித்து வரும் அத்ரங்கி ரே என்ற திரைப்படமும் இந்த ஆண்டே வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், நடிகர் தனுஷை டுவிட்டர் சமூக வலைதளத்தில் பின் தொடர்வோர் எண்ணிக்கை 1 கோடியை கடந்துள்ளது. இதன் மூலம் நடிகர் தனுஷ், தமிழ் திரைப்பட உலகில் 1 கோடிக்கும் அதிகமானோர் பின்தொடர கூடிய முதல் பிரபலம் ஆகியுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading