Local

நள்ளிரவு முதல் பஸ் கட்டணமும் 4 வீதத்தால் உயர்வு!

பஸ் கட்டணங்களை 4 சதவீதத்தால் அதிகரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆரம்ப கட்டணத்தைத் தவிர ஏனைய கட்டணங்கள் இன்று புதன்கிழமை நள்ளிரவு முதல் 4 வீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளது.

டீசல் விலை அதிகரிப்பு காரணமாக பஸ் கட்டணங்களை அதிகரிப்பது தொடர்பான பேச்சு இன்று முற்பகல் போக்குவரத்து அமைச்சில் நடைபெற்றது. தனியார் பஸ் சங்கங்களின் பிரதிநிதிகளும் இதில் பங்கேற்றிருந்தனர்.

இந்தச் சந்திப்பின்போதே பஸ் கட்டணத்தை அதிகரிப்பதற்கு இணக்கம் காணப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading