நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் போக்குவரத்து மீண்டும் இடைநிறுத்தம்
காங்கேசன்துறை நாகப்பட்டினத்துக்கு இடையிலான பயணிகள் கப்பல் போக்குவரத்து போக்குவரத்து கடந்த 22 ஆம் திகதி ஆரம்பித்த நிலையில் மீண்டும் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பெய்துவரும் கடும் மழை மற்றும் மோசமான வானிலையைக் கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக கப்பலை இயக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், அதனால் இன்று முதல் நாளை மறுதினம் வரை கப்பல் போக்குவரத்து தற்காலிகமாக இடை நிறுத்தப்படுவதாக கப்பல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
மார்ச் 1 முதல் நாகை – இலங்கை இடையேயான கப்பல் சேவை வழக்கம்போல் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.