GossipLocal

நாமலுக்கு எப்போது கல்யாணம்? மஹிந்த கூறிய பதில்!

‘நாமல் ராஜபக்சவுக்கு எப்போது கல்யாணம்? ஏன் பெண்ணொருத்தியை கரம்பிடிக்க தயங்குகிறார்.”  என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மஹிந்த ராஜபக்சவின் இளைய மகனுக்கு கடந்த வியாழனன்று மிகவும் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றிருந்தது.முக்கிய அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இதில் கலந்துகொண்ட பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, மங்கள சமரவீர உட்பட  அனைத்து அரசியல் பிரமுகர்களும் மேற்படி வினாவை தொடுத்துள்ளனர்.

இவற்றுக்கு பதிலளித்துள்ள மஹிந்த

” தம்பிமாரை கரைசேர்த்துவிட்டு , மணம் முடிக்க மகன் விரும்புகிறார் போல் தெரிகிறது. அதுவும் நல்லதுதாதேன.” என சிரித்தபடியே பதிலளித்துள்ளார்.

அப்படியா, எதுஎப்படியே சீக்கிரம் முடித்து வையுங்கள். அப்போது பக்கபலமாக இருக்கும் என்று சிலர் கூறியுள்ளனர்.

 

 

 

 

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading