Local

நாயால்கூட சாப்பிட முடியாததை எனக்கு தந்தனர்! – ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் மீது மைத்திரி பாய்ச்சல்

நாய் கூடச் சாப்பிட முடியாத முந்திரிப் பருப்புகளை ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானத்தில் தனக்குப் பரிமாறப்பட்டதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விசனம் வெளியிட்டுள்ளார்.

அம்பாந்தோட்டையில் நேற்று விவசாயிகள் மத்தியில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு கூறினார்.

”அண்மையில் காத்மண்டுவில் இருந்து புதுடில்லி வழியாக கொழும்புக்கு ஸ்ரீலங்கன் விமான சேவையில் பயணித்தேன். அப்போது, விமானத்தில் தரப்பட்ட தரம் குறைந்த முந்திரிப் பருப்பை என்னால் சாப்பிட முடியவில்லை.

மனிதர்களால் சாப்பிட முடியாத –  நாய் கூடத் தின்னாத இந்தப் பருப்புக்களை கொள்வனவு செய்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

எனினும், இந்தத் தரம் குறைந்த முந்திரிப் பருப்பு தொடர்பாக விமானப் பணியாளர்களிடம் கேள்வி எழுப்பினாரா என்பது குறித்து அவர் எந்த தகவலையும் வெளியிடவில்லை.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading