Lead NewsLocal

கூட்டமைப்பின் எம்.பிக்கள் நாளை தீவிர ஆலோசனை!

தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பில் தீர்க்கமான முடிவு ஒன்றை எடுப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை கொழும்பில் நடைபெறவுள்ளது எனக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ‘புதுச்சுடர்’ இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்

“தமிழ் அரசியல் கைதிகள் விடயத்தில் இனியும் அரசு காலம் தாழ்த்த முடியாது. ஜனாதிபதி இது தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவு ஒன்றை முன்வைக்கவேண்டும் என வலியுறுத்தும் கோரிக்கை ஒன்றை முன்வைப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் நாளை கொழும்பில் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் நடைபெறும். இதில் தமிழ் அரசியல் கைதிகள் குறித்து உறுதியான முடிவெடுக்கப்படும்” என்று அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இவ்வாரம் கொழும்பில் மாபெரும் போராட்டம் ஒன்றை மேற்கொள்ளப்போவதாகவும் கூட்டமைப்பு அறிவித்திருந்தது. இந்தப் போராட்டத்தை எந்த வழியில் முன்னெடுப்பது தொடர்பிலும் நாளை நடைபெறும் கூட்டமைப்பின் நாடாளுமன்றக்குழுக் கூட்டத்தில் ஆராயப்படும் எனவும் செல்வம் அடைக்கலநாதன் எம்.பி. மேலும் கூறினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading