மனித உடலால் உணரக்கூடிய கடும் வெப்பம் நிலவக்கூடும்
வெப்பமான காலநிலை குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அதன்படி, நாளை (19) நாடளாவிய ரீதியில் 5 மாகாணங்கள் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு காலநிலை “எச்சரிக்கை” மட்டத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மாகாணங்களிலும் மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களிலும் வெப்பநிலை அதிகமாக இருக்கலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேற்கூறிய பகுதிகளில் வெப்பம், மனித உடலால் உணரப்படும் ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதிகளில் உள்ள மக்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், இயலுமான வரையில் நிழலான பகுதிகளில் இருக்கமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் மற்றும் சிறு குழந்தைகளை கவனித்துக் கொள்ளவும், நாளை (19) இயலுமானவரை வெள்ளை அல்லது வெளிர் நிற, இலகுரக ஆடைகளை அணியவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

You must be logged in to post a comment.