Cinema

நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்க வருகிறார் நடிகர் விஜயகாந்த்!

ஆறு ஆண்டுகளுக்கு பிறகு  நடிகர் விஜயகாந்த் நடிக்க வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நான், சலீம், பிச்சைக்காரன் ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தவர். இவரது படங்கள் அனைத்தும் வித்தியாசமாக இருந்ததால் மக்களின் கவனத்தை ஈர்த்தது.

இவர் தற்போது விஜய் மில்டன் இயக்கும் “மழை பிடிக்காத மனிதன்” என்ற படத்தில் மழையை வெறுக்கும் மனிதனாக நடிக்கவுள்ளார்.

இதனை தொடர்ந்து இப்படத்தில் நடிகர் விஜயகாந்த் நடிக்க தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் கடைசியாக தனது மகன் சண்முக பாண்டியன் நடித்த ‘சகாப்தம்’ படத்தில் சிறப்பு வேடத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் அரசியலுக்கு பிறகு ஆறு ஆண்டுகள் கழித்து விஜயகாந்த் நடிக்க வருவது அவரது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading