Local

நீதிவானின் காரையும் விட்டு வைக்காத திருடன்!

நவீன இரண்டு மாடி வீடொன்றில் நீதவான் ஒருவரை அடைத்து வைத்துவிட்டு, அவரது காரை ஒருவர் திருடிச்சென்ற சம்பவமொன்று பிலியந்தலை-மடபாத்த பிரதேசத்தில் இருந்து பதிவாகியுள்ளது.

வாடகை அடிப்படையில் தனது வீட்டை வாங்க வந்த நபர் ஒருவர் காரை எடுத்துச் சென்றதோடு, நீதவானை குறித்த வீட்டில் அடைத்து வைத்துள்ளார்.

நீதவான் ஒருவர் பிலியந்தலை மடபாத்த பிரதேசத்தில் உள்ள தனது நவீன பாணியிலான இரண்டு மாடி சொகுசு வீட்டை வாடகைத் தளத்திற்கு வழங்குவதாக பிரபல இணையத்தளமொன்றில் விளம்பரம் ஒன்றை வெளியிட்டு அதன் பிரகாரம் நேற்றைய தினம் குறித்த வீட்டை பார்வையிட நபர் ஒருவர் வந்துள்ளார்.

அதன்படி, பிலியந்தலை மடபாத்த பிரதேசத்தில் அமைந்துள்ள வீட்டை கொள்வனவு செய்தவருக்கு காண்பிப்பதற்காக நீதவான் தனது சொகுசு காரில் வந்துள்ளார்.

எனினும், நீதவான் வீட்டைக் காண்பிக்கும் போது, ​​குறித்த நபர் நீதவானை மாடிக்குள் வைத்து கதவை மூடிவிட்டு நீதவானின் சொகுசு காருடன் தப்பிச் சென்றுள்ளார்.

கீழ் தளத்தில் காரின் சாவியை நீதவான் வைத்திருந்ததால், குறித்த நபர் காருடன் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபர் நீதவானின் காருடன் தப்பிச் செல்வது அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராக்களில் பதிவாகியுள்ளது.

எவ்வாறாயினும், அவர் சிறை வைக்கப்பட்டிருந்த மேல்மாடி ஜன்னல் வழியாக குதித்த நீதவான், இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.

இந்நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading