Local

நீர் கொழும்பில் கொடூரம் – உயிரோடு எரிக்கப்பட்ட நாய்! விசாரணை ஆரம்பம்!!

நீர்கொழும்பில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த நாயொன்று  எரியூட்டிக் கொல்லப்பட்டுள்ள சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கடந்த 31 ஆம் திகதி இரவு நாய் அடைக்கப்பட்டிருந்த கூண்டிற்கு மண்ணெய் ஊற்றி எரியூட்டப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரிகாயங்களுக்கு உள்ளான குறித்த நாய் நேற்றிரவு உயிரிழந்துள்ளது.

லெப்ரடோ (labrador) இன நாயொன்றே இவ்வாறு தீ வைத்துக் கொல்லப்பட்டுள்ளது,இதேவேளை, நாய் அடைக்கப்பட்டிருந்த இடத்தில் கைவிரல் அடையாளங்கள் பெறப்பட்டுள்ளன.

இந்தச் சம்பவம் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading