நூலிழையில் தப்பிய இஸ்ரேல் விமான பயணிகள் : இஸ்ரேல் பிரதமர் பாராட்டு
துபாயில் இருந்து வந்த பிளை துபாய் விமானத்தை பயன்படுத்தி பேராபத்து நடக்க இருந்ததை தடுத்த அனைவரும் கதாநாயகர்கள் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பாராட்டியுள்ளார்.
அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது, ”விமானம் இஸ்ரேலை நெருங்கிய போது, ஒருவிமானி மற்றொரு விமானியை கத்தியால் தாக்கினார். பயணிகள் அனைவருடன் விமானத்தை மோத வைக்க சதியில் ஈடுபட்டார்.
அசாதாரணமான சமயோசிதம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்திய கதாநாயகர்களுக்கு எனது வாழ்த்துகள். அவர்கள் பல்லாயிரக்கணக்கான உயிர்களை காத்ததுடன், பேராபத்தை தவிர்த்து உள்ளனர்.
கத்தியால் தாக்கிய விமானியை சவுதி அரேபியா கைது செய்தது. மற்றொரு விமானி தான் , விமானம் பத்திரமாக தரையிறங்க உதவினார் என அதில் பயணித்த ஒருவர் என்னிடம் கூறினார். மற்றொரு அச்சுறுத்தலை சந்திக்க இஸ்ரேல் தயாராகி வருகிறது.” என நெதன்யாகு கூறினார்.

துபாயில் இருந்து இஸ்ரேலை சேர்ந்தவர்களுடன் பிளை துபாய் விமானம் டெல் அவிவ் நகர் நோக்கி சென்றது. விமானம் இஸ்ரேலை நெருங்கிய நிலையில், ஓமனைச் சேர்ந்த விமானிஒருவர், இந்தியாவை சேர்ந்த ஸ்மித் மச்சார் என்ற விமானியை கத்தியால் குத்தினார். இதனால், ஆபத்து காலங்களில் பயன்படுத்தப்படும் அவசர எச்சரிக்கையை இந்திய விமானி வெளியிட்டார்.

பயணிகள் விமானம் சில வினாடிகளில் பல்லாயிரம் அடி உயரம் கீழே இறங்கியது. பயணிகள் பதறிய நிலையில், மற்ற விமானிகள் உதவியுடன் தாக்குதல் நடத்திய விமானியை பிடித்ததுடன், ஸ்மித் மச்சார் விமானத்தை சவுதி அரேபியாவில் தரையிறக்கினார். ஒமன் விமானியை சவுதி அதிகாரிகள் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

You must be logged in to post a comment.