World

நேபாளத்தில் பனிப்புயலில் சிக்கி எட்டுபேர் பலி!

நேபாளத்தில், மலையேற்றம் சென்ற எட்டு பேர், பனிப்புயலில் சிக்கி பலியாகினர்.

நேபாளத்தில், குர்ஜா மலை சிகரம் உள்ளது. இங்கு மலையேற்றம் மேற்கொள்வதற்காக, கிழக்கு ஆசிய நாடான, தென் கொரியாவைச் சேர்ந்த ஐந்துக்கும் மேற்பட்டோர், நேபாளத்தைச் சேர்ந்த வழிகாட்டி ஒருவருடன், குர்ஜா கிராமத்தில் இருந்து, சமீபத்தில் புறப்பட்டுச் சென்றனர்.

அவர்கள், முகாம் அமைத்து தங்கினர். அப்போது, திடீரென ஏற்பட்ட கடுமையான பனிப்புயலில் சிக்கி, அனைவரும் உயிரிழந்துள்ளனர்.இது குறித்து தகவலறிந்த மீட்புப் படையினர், ஹெலிகாப்டரில், சம்பவ இடத்திற்கு சென்று, எட்டு பேரின் உடல்களை மீட்டனர். காணாமல் போன ஒருவரை தேடுகின்றனர்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading