World

பசியின் கொடுமையால் காசாவில் மரணிக்கப்போகும் 14 ஆயிரம் குழந்தைகள்!

இஸ்ரேல் ஐக்கிய நாடுகள் சபையின் சரக்குந்துகளை(ட்ரக்குகளை) அனுமதிக்கத் தவறினால், அடுத்த 48 மணி நேரத்திற்குள் காஸாவில் பசியின் கொடுமையால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கை 14,000-ஐத் தாண்டிவிடும்…

இது ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான உயர் அதிகாரி டாம் ஃபிளெட்சர் விடுத்திருக்கும் எச்சரிக்கை…

காஸாவில் உள்ள குழந்தைகளின் தாய்மார்கள் தங்களது குழந்தைகளுக்குப் பாலூட்டக்கூட முடியாத நிலையில் இருக்கிறார்கள்… ஏனெனில், அவர்களுக்கே போதுமான ஊட்டச்சத்து இல்லை…
“தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க முடியாத ஊட்டச்சத்து குறைபாடுள்ள தாய்மார்களுக்கு இந்த குழந்தைகளின் உணவை கொண்டு சேர்ப்பதற்காக நாங்கள் அனைத்து விதமான அபாயங்களையும் எதிர்கொள்கிறோம்” என்று ஐக்கிய நாடுகள் சபையின் தலைவர் பிபிசியிடம் மேலும் தெரிவித்தார்…

பிபிசியை மேற்கோள்காட்டி ஃபிளெட்சர் கூறியது, “அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த 14,000 குழந்தைகளில் இயன்றவரை பல உயிர்களைக் காப்பாற்ற நான் விரும்புகிறேன்” என்பதே…

நூற்றுக்கும் மேற்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் சரக்குந்துகள் நிவாரணப் பொருட்களுடன் காஸாவின் எல்லையில் காத்திருக்கின்றன…

குறைந்தபட்சம் நூறு சரக்குந்துகளாவது உள்ளே அனுமதிக்கப்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்துகிறார்…

உலகம் இப்போது இந்த பேரவலமான மரணங்களை நிகழாதது போல் பாசாங்கு செய்கிறது… இது கோழைத்தனமும், கையாலாகாதத்தனமும்தான்… இதைத் தவிர வேறு என்ன சொல்ல முடியும்…

நாம் அனைவரும் வசதியாக நான்கு வேளை உணவு உட்கொள்ளும் நிலையில், இந்த பல்லாயிரக்கணக்கான இளம் குழந்தைகளும் அவர்களின் தாய்மார்களும் பசியால் வாடுகிறார்கள்… மரணத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பதை நாம் நினைத்துப் பார்க்க வேண்டும்…..

– Jayarajan –

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading