Local

பச்சிளம் குழந்தையை கொன்று தேயிலை மாலைக்குள் வீசிய தாய்

நுவரெலியா நேஸ்பி தோட்டத்தில் பச்சிளம் குழந்தையை கொன்று, தேயிலை மலைக்குள் வீசிய தாயை கைதுசெய்வதற்கான தேடுதல் வேட்டையில் பொலிஸார் இறங்கியுள்ளனர்.

நுவரெலியா நேஸ்பி தோட்டத்தில் தேயிலை மலைக்குள் இருந்து ஆண் சிசுவொன்றில் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பொதுமக்களால் வழங்கப்பட்ட தகவலுக்கமையவே சம்பவ இடத்துக்கு வந்து பொலிஸார், சடலத்தை மீட்டனர்.

இதனையடுத்து குறித்த குழந்தையை பிரசவித்த தாயை பொலிஸார் தேடிவருகின்றனர் .கொலை செய்த பின்னரே இவர் சிசுவை இவ்வாறு வீசியிருக்கலாம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சிசுவின் சடலம் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading