Cinema

படப்பிடிப்பில் இருந்த நடிகர் விஜய் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றதால் சென்னையில் பரபரப்பு

சென்னை: பிரபல திரைப்பட நடிகர் விஜயிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்துகின்றனர். நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பில் இருந்த விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்து சென்றனர். விஜய் நடித்த பிகில்  படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 20 இடங்களில் காலை முதல் வருமான வரித்துறை சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. அதேபோல் கோபுரம் ஃபிலிம்ஸ் அன்புச்செழியன் வீடு, அலுவலகத்திலும் சோதனை நடைபெற்று வருகிறது.

இதனிடையே, நெய்வேலி என்.எல்.சி இரண்டாவது சுரங்கத்தில் விஜய் நடிப்பில் தயாராகி வரும் மாஸ்டர் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. சி.ஐ.எஸ்.எப். வீரர்களுடன் அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் நடிகர் விஜய்யிடம் நேரில் சம்மன் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் அவரிடம் விசாரணையும் நடத்தினர். தொடர்ந்து நடிகர் விஜயை வருமான வரித்துறையினர் அழைத்துச் சென்றனர்.

இதனால் நெய்வேலியில் மாஸ்டர் படப்பிடிப்பை ரத்து செய்து விட்டு நடிகர் விஜயை வருமான வரித்துறை அதிகாரிகள் சென்னை அழைத்து வருகிறது. வருமான வரித்துறையின் இன்னோவா காரில் அதிகாரிகள் புடைசூழ சென்னை அழைத்து வரப்படுகிறார் விஜய். விஜய் தமக்கு சொந்தமான ஜாகுவார் காரில் பயணம் செய்ய அதிகாரிகள் மறுப்பு தெரிவித்துள்ளனர்….

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading