வாகனம் கட்டுப்பாட்டை இழந்து மோதியதில் இளம் தாய் உயிரிழப்பு

#வவுனியா பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்திற்கு முன்பாக இன்று (புதன்கிழமை) மதியம்
குறித்த பகுதியில் அமைந்துள்ள வாகனம் பழுது பார்க்கும் நிலையத்தில் நின்ற வாகனம் ஒன்றினை அங்கு பணிபுரியும் #பெண்_ஊழியர் ஒருவர் பின்புறமாக நோக்கி செலுத்தியுள்ளார்.
இதன்போது கட்டுப்பாட்டை இழந்த வாகனம், வேகமாக பின்புறமாக நோக்கிச் சென்று வீதியால் பயணித்துக்கொண்டிருந்த #இரு_துவிச்சக்கர வண்டியுடன் மோதி பொலிஸ் அத்தியட்சகர் காரியாலத்தின் வேலியையும் சோதமாக்கியது.
விபத்தில் துவிச்சக்கர வண்டியில் தனது 7 வயது பாடசாலை மாணவனை ஏற்றிச்சென்ற #இளம்_தாய் உட்பட பாடசாலை மாணவனும் மற்றுமொரு பெண்ணும் படுகாயமடைந்த நிலையில், வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளனர்.
எனினும் சிகிச்சைப் பலனின்றி குறித்த தாய் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ச.புஸ்பராணி (வயது 36) என்ற 3 பிள்ளைகளின் தாயே இவ்வாறு #உயிரிழந்துள்ளார்.
