Local

பதவி விலகிய பின்னரும் உத்தியோகபூர்வ இல்லத்தில் நாமல் ராஜபக்ச!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அமைச்சர் பதவியை விட்டு விலகிய பின்னரும் அமைச்சரின் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர இதனை தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று தயாசிறி ஜயசேகர மின்சாரக் கட்டணம் செலுத்தாதமை தொடர்பாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியதையடுத்தே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் தயாசிறி ஜயசேகரவும் அமைச்சுப் பதவியில் இருந்து விலகிய போதிலும் அவர் இன்னமும் உத்தியோகபூர்வ இல்லத்திலேயே தங்கியிருப்பதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர, நாமல் ராஜபக்ஷவைத் தவிர மேலும் பல முன்னாள் அமைச்சர்களும் தமது உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே தங்கியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading