Local

பதில் பொலிஸ் மா அதிபருக்கு எதிராக 4 மனுக்கள்!

தேசபந்து தென்னகோன் பதில் பொலிஸ் மா அதிபராக செயற்படுவதைத் தடுத்தும், அவர் பொலிஸ் மா அதிபராகப் பதவியேற்பதைத் தடுக்கும் உத்தரவைக் கோரியும் 04 அடிப்படை உரிமை மனுக்கள் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித், உண்மை மற்றும் நீதிக்கான சட்டத்தரணிகள் அமைப்பு, ஈஸ்டர் தாக்குதலில் பாதிக்கப்பட்ட மூவர் மற்றும் போராட்டக்காரர் ஆகியோர் இந்த மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த மனுக்களில் பிரதிவாதிகளாக சட்டமா அதிபர், அரசியலமைப்புச் சபை மற்றும் பதில் பொலிஸ் மா அதிபர்  தேசபந்து தென்னகோன் ஆகியோர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

ஈஸ்டர் குண்டுத் தாக்குதலின் போது மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக இருந்த  தேசபந்து தென்னகோன் தனது கடமைகளை மீறியிருந்ததாக மனுதாரர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபராக  தேசபந்து தென்னகோன்  செயற்பட்ட காலத்தில், காலி முகத்திடலில் தங்கியிருந்த போராட்டக்காரர்கள் கொடூரமான முறையில் தாக்கப்பட்டதையும் இந்த மனுக்கள் சுட்டிக் காட்டுகின்றன.

இதனால், நாட்டின் சட்டத்தை அமல்படுத்தும் நாட்டின் முக்கிய துறையை கையாளும் பொறுப்பு, மனித நேயமுள்ள ஒருவருக்கு வழங்கப்பட வேண்டும் என்றும், அதற்கு முரணாக செயற்பட்ட ஒருவருக்கு இந்த பொறுப்பை வழங்குவது தமது அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும் என, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்களில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading