பத்மேவை பதறவைத்த, செவ்வந்தியை சிதறவைத்த ஓலுகவின் புது அவதாரம்
இலங்கையில் அண்மையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவங்களில் ஒன்றே செவ்வந்தி மற்றும் குழுவினரின் கைது.
அதற்கு முன்னர் இந்தோனேசியாவில் இருந்து பாதாள உலக பிரபலங்களை கைது செய்து இலங்கைக்கு கொண்டு வந்தமையும் உலகின் கவனத்தை ஈர்த்த சம்பவங்களில் ஒன்றாகும்.
இவற்றின் பின்னால் இருந்தவர் மேல் மாகாண குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரியாக கடமையாற்றும் ASP-ரொஹான் ஓலுகல. அவர் விசேட அதிரடிப்படையின் பொறுப்பாளராகவும் உள்ளார்.
இவரது துணிச்சலான நடவடிக்கைகள் வெகுவாக பாராட்டப்பட்டன. மேலும் யார் இவர் என்றும் பலரைத் தேடிப்பார்க்க வைத்தது.
இந்நிலையில், ஓலுகல அவர்களின் படங்கள், காணொளிகள் பல்வேறு இப்போது சமூக ஊடகங்களில் வெளியாகி வருகின்றன.
அது என்னவென்று தேடிப்பார்த்தால், அது Back 2 School எனப்படும், பழைய மாணவர்கள், பல்வேறு ஆண்டுகளுக்கு பின்னர் தமது பாடசாலைகளுக்குச் செல்லும் நிகழ்வே அது.
கொழும்பு, தேர்ஷ்டன் கல்லூரியின் பழைய மாணவரான ஓலுகலவும், தமது பள்ளிப்பருவத்தை மீட்டெடுக்க, பாடசாலை சீருடை அணிந்து பாடசாலைக்கு மீண்டும் சென்றுள்ளார்.
அத்தோடு, தனது பாடசாலை முன்னாள் மாணவர்கல் மத்தியில் சுவாரஸ்யமாக உரையாற்றி, தனது நாளை சிறப்பாக கொண்டாடியுள்ளார்.

You must be logged in to post a comment.