உலகை 150 முறை அழிக்கும் அணு ஆயுதம் அமெரிக்காவிடம்…!!!
இந்த உலகை 150 முறை அழிப்பதற்குப் போதுமான அணு ஆயுதங்கள் நம்மிடம் உள்ளன!” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில் பேசிய டிரம்ப், “இது ஒரு போட்டி நிறைந்த உலகம். சீனா எப்போதுமே நம்மைக் கவனித்துக்கொண்டிருக்கிறது, நாமும் எப்போதுமே அவர்களைக் கவனித்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருவரையொருவர் வீழ்த்துவதற்குப் பதிலாக, நாம் இணைந்து செயல்பட்டால், இன்னும் பெரியவர்களாக, வலிமையானவர்களாக மாற முடியும் என்று நான் நினைக்கிறேன்,” என்றார்.
“அமெரிக்காவிடம் தான் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா இரண்டாவது இடத்தில் உள்ளது. சீனா மூன்றாவது இடத்தில் இருந்தாலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் அவர்கள் நம்மை சமன் செய்து விடுவார்கள். அவர்கள் மிக வேகமாக அணு ஆயுதங்களை உருவாக்குகிறார்கள்,” என்று கூறினார்.

You must be logged in to post a comment.