Local

இலங்கையில் வாகன இறக்குமதி! அரசுக்கு 63ஆயிரம் கோடி ரூபா இலாபம்!!

இந்த ஆண்டின் முதல் 10 மாதங்களில் இலங்கை சுமார் 250,000 வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாகவும், இதன் மூலம் வரியாக 63,000 கோடி ரூபாயை ஈட்டியுள்ளதாகவும் சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இந்த வரி வருமானம், கடந்த ஆண்டின் அதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பல மடங்கு அதிகமாகும். இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் தனிநபர் மற்றும் வர்த்தக வாகனங்கள் உட்பட ஒட்டுமொத்த இறக்குமதிக்காக சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் (சுமார் 36,431 கோடி இலங்கை ரூபா) செலவிடப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்ச செலவினம் செப்டம்பர் மாதத்தில் (286 மில்லியன் அமெரிக்க டாலர்கள்) பதிவாகியுள்ளது.

மத்திய வங்கியின் தரவுகளின்படி, ஏப்ரல் மாதம் 134 மில்லியன் டொலர்கள், மே மாதம் 118 மில்லியன் டொலர்கள், ஜூன் மாதம் 163 மில்லியன் டொலர்கள், ஜூலை மாதம் 193 மில்லியன் டொலர்கள் மற்றும் ஓகஸ்ட் மாதம் 249 மில்லியன் டொலர்கள் என மாதந்தோறும் வாகன இறக்குமதிக்காக செலவிடப்பட்டுள்ளது.

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading