Sports

20 ஓவர் கிரிக்கெட் தொடர்: பந்துவீச்சை தேர்வு செய்தது இந்திய அணி!

20 ஓவர் கிரிக்கெட் தொடரில் கோலி தலைமையிலான இந்தியா அணி நாணயச் சுழற்சியில் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. பிரிஸ்பேனில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 4 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இதனால் மூன்று போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் ஆஸ்திரேலியா 1–0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கின்றது.

இந்த நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2ஆவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய ஸ்டேடியமான மெல்போர்னில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கின்றது. தொடர்ச்சியாக ஏழு 20 ஓவர் தொடர்களை கைப்பற்றி அசத்தியுள்ள இந்திய அணி 8ஆவது முறையாக முத்திரை பதிக்க வேண்டும் என்றால் இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டும்.

இந்நிலையில், ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. தொடரை இழக்காமல் இருக்க, இந்த போட்டியில் இந்திய அணி வென்றாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading