LocalSports

பரபரப்பான ஆட்டத்தில் இலங்கை அணி த்ரில் வெற்றி!

ஆசிய கிண்ண கிரிக்கெட் தொடரில் தற்போது இடம்பெற்றுவரும் போட்டியில் இலங்கை அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு 292 என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்திருந்தது.

குறித்த போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பாடத் தீர்மானித்தது.

எனவே முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுக்களை இழந்து 291 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

இலங்கை அணி சார்பில் குசல் மெந்திஸ் அதிகபட்சமாக 92 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார். துனித் வெல்லாலகே ஆட்டமிழக்காது 33 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.பெத்தும் நிஸ்ஸங்க 41 ஓட்டங்களையும் மற்றும் சரித் அசலங்க 36 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் Gulbadin Naib 4 விக்கெட்டுக்களையும், Rashid Khan 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி சகல விக்கட்டுக்களையும் இழந்து 289 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டு 2 ஓட்டங்களால் தோல்வியை தழுவியது.

இதன்மூலம் இலங்கை அணி சூப்பர் 4 போட்டியில் விளையாட தகுதி பெற்றது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading