Sports

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா அபார வெற்றி!

உலக கிண்ண கிரிக்கெட் தொடரின் இன்று இடம்பெற்ற போட்டியில் இந்திய அணி 07 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.

அஹமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற போட்டியில் நாணய சுழற்சியில் இந்திய அணி வென்ற நிலையில் முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 42.4 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 191 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அணிசார்பில் அதிகபடியாக, பாபர் அசாம் 50 ஓட்டங்களையும், மொஹம்மட் ரிஸ்வான் 49 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில் இந்திய அணியின் ஜஸ்பிரித் பும்ரா 19 ஓட்டங்களுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

இந்நிலையில், 192 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 30.3 ஓவர்களில் 03 விக்கெட்டுக்களை இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

அணிசார்பில் அதிகபடியாக, ரோஹித் சர்மா 86 ஓட்டங்களையும், ஸ்ரேயாஷ் ஐயர் 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

பந்துவீச்சில், பாகிஸ்தான் அணியின் ஷஹீன் ஷா அப்ரிடி 03 ஓட்டக்ளுக்கு 02 விக்கெட்டுக்களை கைப்பற்றினார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading