Local

பிரசன்னவின் மனுவை விசாரிக்க ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம்!

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சமர்ப்பித்த மேன்முறையீட்டு மனுவை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம்  முன்னிலையில்  விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (01) தீர்மானித்தது.

கொழும்பு மேல் நீதிமன்றினால் தமக்கு எதிராக விதிக்கப்பட்ட இடைநிறுத்தப்பட்ட சிறைத் தண்டனையை இரத்துச் செய்து தம்மை அனைத்து குற்றச் சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்யுமாறு கோரி  பிரசன்ன ரணதுங்க இந்த மனுவை தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளான நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் சமத் மொராயஸ் ஆகியோர் முன்னிலையில் இன்று ஆராயப்பட்டது.

பிரசன்ன ரணதுங்கவின் சார்பில் அவரது சட்டத்தரணிகள் இந்த மனுவை ஐவர் அடங்கிய அமர்வு முன் விசாரணை செய்யுமாறு பிரேரணை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

குறித்த பிரேரணையை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் நிஷங்க பந்துல கருணாரத்ன, இது தொடர்பான மேன்முறையீட்டு மனுவை ஐவர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading