Local

பிரதமர் மஹிந்த தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் கூட்டமைப்பு பங்கேற்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான கலந்துரையாடல் ஒன்று இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது. அலரி மாளிகையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் சுமார் ஒரு மணி நேரம்இடம்பெற்றுள்ளது.
இதன்போது கொரோனா வைரஸ் தொற்று தொடர்பான தற்போதைய நிலைவரம் தொடர்பில் ஆராயப்பட்டதுடன் கொரோனாவை இல்லாதொழிக்க அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைதிட்டங்கள் தொடர்பாகவும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்துள்ளனர்.
இந்த கலந்துரையாடலில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் , சுகாதார அதிகாரிகள் மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் மற்றும் கொவிட் – 19 ஒழிப்பிற்கான ஜனாதிபதி விசேட செயலணியின் தலைவர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.
இருப்பினும் ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசிய கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பங்குப் பற்றியது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading