பிரபல நடிகை சித்ராவின் மரணத்தில் சிக்கிய தமிழக அமைச்சர்?

பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கத்தில் நடந்து வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் படப்பிடிப்பில் தினமும் பங்கேற்றுவிட்டு திருவான்மியூரில் உள்ள வீட்டுக்கு திரும்புவது சிரமமாக இருந்ததால், நசரத்பேட்டை அடுத்த பழஞ்சூரில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கி இருந்து படப்பிடிப்பில் பங்கேற்று வந்துள்ளார் சித்ரா.
பூந்தமல்லி அருகே இருக்கும் கரையான்சாவடியை சேர்ந்த ஜேம்நாத்துடன் சித்ராவுக்கு நிச்சயதார்த்தம் நடந்திருந்த நிலையில், அவரும் சித்ராவுடன் அந்த ஓட்டலில் தங்கி இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன் தினம் அதிகாலை 2 மணிக்கு படப்பிடிப்பு முடிந்து வந்த சித்ரா, அறைக்குள் வந்ததும் காருக்குள் ஒரு பொருளை மறந்து வைத்துவிட்டேன். அதை எடுத்து வாருங்கள் என்று ஹேம்நாத்துடன் சொன்னதாகவும்,அதனால் அறையை விட்டு வெளியேறியதும் சித்ரா அறைக்கதவை சாத்திக்கொண்டார் என்றும் ஹேம்நாத் தெரிவித்திருக்கிறார்.
ஓட்டல் நிர்வாகத்திடம் சொல்லி இன்னொரு சாவியை போட்டு திறந்து உள்ளே சென்று பார்த்தால் பட்டுப்புடவையில் சித்ரா தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தார் என்று சொல்கிறார் ஜேஹ்நாத்.
ஆனால், சித்ராவின் தாயாரோ ஹேம்நாத் தனது மகளை அடித்துக் கொன்றுவிட்டதாக குற்றம் சாட்டுகிறார்.
சித்ராவின் மரணத்தில் நிலவும் மர்மம் குறித்து விசாரித்து வரும் பொலிசார், அந்த ஓட்டலில் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, தமிழக அமைச்சர் ஒருவரின் கார் வந்து செல்வது கண்டு அதிர்ந்தனர்.
அந்த அமைச்சர் யார்? எதற்காக அவர் நள்ளிரவில் ஓட்டலிக்கு வந்து செல்கிறார்? என்பது குறித்து பொலிசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.
மேலும் சித்ராவின் வாட்ஸ்அப்பிற்கு அதிகமான குறுந்தகவல் வந்திருப்பதாகவும், அதில் அமைச்சர் ஒருவர் இந்த வருட புத்தாண்டை என்னுடன் கொண்டாட வேண்டும் என்று வற்புறுத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னையில் கருப்பு எம்ஜிஆர் என்று தன்னைத்தானே அழைத்துக்கொள்ளும் அமைச்சர் ஒருவர் நிறைய நடிகைகளுடன் பழக்கம் வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இவர், புறநகரில் உள்ள ஓட்டலில் நடிகைகளுடன் விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வாராம். இதனால் அவர் வந்து சென்றாரா அல்லது அந்த ஓட்டலில் வேறு அமைச்சர் யாராவது தங்கியிருந்து நள்ளிரவில் வெளியேறினாரா, எதற்காக அமைச்சரின் கார் ஓட்டலுக்கு வந்து சென்றது என்பது மர்மமாக உள்ளது.
ஆனாலும், நடிகையின் தற்கொலைக்கு யாராவது தூண்டுகோலாக இருந்திருக்க வேண்டும் என்று பொலிசார் சந்தேகிக்கிப்பதோடு விசாரித்தும் வருகின்றனர்.
