Cinema

பிரபல மொடல் அழகி தற்கொலை!

இந்தியாவில் பிரபல மொடல் அழகி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் தொடர்பில் ஐபிஎல் கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மாவிடம் விசாரணை நடத்தப்படவுள்ளது.

குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் தன்யா சிங் (28).

மொடல் அழகியும், ஆடை வடிவமைப்பாளருமான இவர் தன் பெற்றோருடன் வசித்து வந்தார்.

இந்த நிலையில், கடந்த திங்கள் கிழமை காலையில் வழக்கம் போலத் தன்யா சிங்கின் அப்பா பன்வர் சிங் எழுப்பச் சென்றிருக்கிறார்.

அப்போதுதான் அவர் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டது தெரியவந்திருக்கிறது.

இது தொடர்பாக உடனே பொலிஸாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார் உடலைக் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பிறகு அவரின் பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், அவரது வீட்டில் சோதனையிட்டதில் தற்கொலைக் குறிப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.

இந்த தற்கொலைக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரித்து வருகிறது.

இந்த நிலையில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட் வீரர் அபிஷேக் ஷர்மாவுக்கும் தன்யா சிங்குக்கும் நெருக்கமான நட்பு இருந்தது தெரியவந்திருக்கிறது.

இது குறித்துப் பேசிய பொலிஸ் அதிகாரி, “சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆல்ரவுண்டர் அபிஷேக் சர்மா தற்கொலை செய்துகொண்ட தன்யா சிங்குடன் நெருக்கமாகப் பழகி வந்திருக்கிறார்.

ஆனால், சமீபகாலமாகத் தன்யா சிங் அனுப்பியிருக்கும் எந்த மெஸெஜ்க்கும் அவர் பதிலளிக்கவில்லை.

தன்யா சிங்கின் செல்போன் தொடர்பு விவரங்களைச் சேகரித்து வருகிறோம்.

அபிஷேக் ஷர்மாவை நேரடியாக விசாரிக்க நோட்டீஸ் அனுப்புவது குறித்து ஆலோசித்து வருகிறோம்.

பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகிறோம். அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் அறிவிக்கப்படும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading