World

பிரபல ஹொலிவூட் நடிகை மடோனாவுக்கு கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு 60 வயதை தாண்டிய ஹாலிவுட் நடிகர், நடிகைகள் தொடர்ந்து பலியாகி வந்தார்கள். சிறிய இடைவெளிக்கு பிறகு ஹொலிவுட் நடிகையும், பாடகியுமான மடோனாவுக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. 61 வயதாகும் மடோனா சந்தேகத்தின் அடிப்படையில் தனக்கு செய்யப்பட்ட மருத்து பரிசோதனையில் கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும். தான் இப்போது தனிமைப்படுத்தப்பட்டு இருப்பதாகவும் மடோனா தனது இன்ஸ்ட்ராகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அவரது ரசிகர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகிறார்கள்.

மடோனா அமெரிக்காவின் புகழ்பெற்ற பாடகி, மற்றும் நடிகை. தி லெஜண்ட் ஆஃப் டேர், போஃர் ரூம்ஸ், எவிட்டா, ஹூஸ் தட், டிக் டிரேஸி, ஏ செர்ட்டியன் சேக்ரிபைஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். மடோனா: ட்ரூத் ஆஃப் டேர் என்ற தனது வாழ்க்கை படத்திலும் நடித்திருக்கிறார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading