Local

புதிய கொரோனாவுக்கு எதிராக பயன்பாட்டிற்கு வரவுள்ள புதிய தடுப்புமருந்துகள்!

 

புதிய BA.2.86 கொரோனா வகைக்கு எதிராகச் செயல்படக்கூடிய திறனைக் கொண்ட Moderna, Pfizer நிறுவனங்கள் அவற்றின் புதுப்பிக்கப்பட்ட COVID-19 தடுப்புமருந்துகளை அறிவித்துள்ளன.

புதிய கொரோனா வகையை உலகச் சுகாதார நிறுவனமும் அமெரிக்கத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையமும் கண்காணித்து வருகின்றன.

Moderna தடுப்புமருந்துக்கு BA.2.86 ரக COVID-19 கிருமியைக் கையாள்வதற்கு 8.7 மடங்கு நோயெதிர்ப்புச் சக்தி உள்ளது.

அதே போல Pfizerஇன் புதுப்பிக்கப்பட்ட தடுப்புமருந்துக்கும் நோயெதிர்ப்பு ஆற்றல் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது BA.2.86 கொரோனா சுவிட்சர்லந்து,தென்னாப்பிரிக்கா, இஸ்ரேல், டென்மார்க், அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலகச் சுகாதார நிறுவனம் கூறியது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading