World

புதிய வகை கொரோனா வைரஸ் முகக்கவசம் அணிந்து கொள்ள அறிவிப்பு!

சிங்கப்பூரில் பரவத் தொடங்கிய புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பதிவாகி உள்ளதால், பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து கொள்ள இந்திய தமிழக சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.

இந்தியாவில் புதிதாக 324 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதில் 290 பேருக்கு கே.பி.2 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், 34 பேருக்கு கே.பி.1 வகை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் அதிகபட்சமாக மேற்கு வங்காளத்தில் ராஜஸ்தான், உத்தரகாண்டில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. =

இருப்பினும் அச்சமோ, பதற்றமோ தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது நல்லது என தெரிவிக்கப்பட்டுள்ளது. முதியவர்கள், கர்ப்பிணிகள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading