Uncategorized

பூமியின் வளைவை பார்க்க பலூன் விமானம் அறிமுகம்!

ஜப்பானில் பலூன் விமானங்கள் மூலம் பூமியைக் காண்பதற்கான ஒரு பயணத்திற்கு 24 மில்லியன் யென் வசூலிக்கப்படுவதாக அறிவிக்கப்படுகின்றது.

ஜப்பானை தளமாகக் கொண்ட ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் பூமியின் வளைவை காண்பதற்கான பலூன் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

வடக்கு ஜப்பானில் உள்ள சப்போரோவை தளமாகக் கொண்ட இவாயா கிகென் (Iwaya Giken) என்ற ஸ்டார்ட்அப் நிறுவனம் பூமியின் வளைவை காண்பதற்கான பலூன் விமானத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பலூன்கள் மூலம் பூமியின் மேற்பரப்பில் இருந்து மனிதர்களால் 25 கிமீ வரை பயணம் செய்ய முடியும்.

அதன் மூலம் பூமியின் வளைவை தெளிவாக பார்க்க முடியும்.

இது குறித்து நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கெய்சுகே இவாயா, “ஜப்பானின் விண்வெளியை சென்றடையும் முயற்சிகள் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) போன்ற அமெரிக்க நிறுவனங்களை விட பின்தங்கிவிட்ட நிலையில், விண்வெளியை அடைவதை எளிதாக்கச் செய்வதே தனது நோக்கம்” என்று கூறினார்.

இது மற்ற பலூன்களை போல் அல்லாமல் ஹீலியம் வாயு மூலம் விண்ணில் செலுத்தப்படும். ஒரு விமானி மற்றும் பயணிகளை ஏற்றிச் செல்லக்கூடிய பலூனின் உள்கட்டமைப்பு  1.5 மீட்டர் (4.9 அடி) விட்டம் கொண்டது.

இதற்கு உள்ளே இருந்து விண்வெளிக்கு மேலே உள்ள இடத்தையும் அல்லது கீழே உள்ள பூமியையும் பார்க்க உதவும் வகையில் பல பெரிய ஜன்னல்களைக் கொண்டுள்ளது.

இந்த பலூன் விமானத்திற்கான முதல் பயணத்தை இந்த ஆண்டின் பிற்பகுதியில் தொடங்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. பயணத்தின் தொடக்கத்தில் பயணிகளிடம் ஒரு பயணத்திற்கு 24 மில்லியன் யென் வசூலிப்பதாகவும் இதனை இயக்குவதற்கு தீவிர பயிற்சி எடுக்க வேண்டியதில்லை என நிறுவனம் தெரிவித்துள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading