Uncategorized

பெரும் எதிர்பார்ப்பில் திரைக்கு வருகிறது ‘விடுதலை!

 

விஜய் சேதுபதி மற்றும் சூரி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து உருவாகியுள்ள ‘விடுதலை‘ பாகம்-1 திரைப்படம் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.

இந்தப் படம், எதிர்வரும் மார்ச் 31ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் இன்று அறிவித்துள்ளது.

‘விடுதலை‘ படத்தின் முன்னோட்டம் அண்மையில் வெளியாகிப் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில் படம் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

‘விடுதலை’ படத்தை ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.

விஜய் சேதுபதி – சூரியுடன் பவானிஸ்ரீ, கெதம் மேனன், பிரகாஷ்ராஜ், ராஜீவ் மேனன் உள்ளிட்ட பலர் நடிப்பில் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தில், சூரிக்கு முக்கிய கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் சூரியின் நடிப்பு பாராட்டைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading