World

பேன் தொல்லையால் சிறுமி உயிரிழப்பு தாய் மற்றும் பாட்டி கைது!

வாஷிங்டன் அமெரிக்காவில் அரிசோனா மாகாணத்தில் டுக்சன் என்ற பகுதியில் வசித்து வந்த சிறுமி ஒருவர், தனக்கு தலை அரிக்கிறது என்று அடிக்கடி புகார் கொடுத்துள்ளார். இவரின் தாயார் பெயர் சான்ட்ரா, பாட்டி பெயர் எலிசபெத். அந்த சிறுமிக்கு பிறந்ததில் இருந்து ரத்த சோகை பிரச்சனை இருந்துள்ளது.

ரத்த சோகை காரணமாக அந்த சிறுமி கடுமையாக அவதிப்பட்டு இருக்கிறார். அந்த சிறுமிக்கு 9 வயது ஆன நிலையில் ரத்த சோகை மோசமான நிலையை அடைந்து உள்ளது. ஆனால் சிறுமிக்கு சிகிச்சை பார்க்க பாட்டி, அம்மா இருவரும் மறுத்துள்ளனர். சிறுமியை மருத்துவமனைக்கு கொண்டு செல்லாமல் வீட்டிலேயே வைத்து இருந்து உள்ளனர்.

இந்த நிலையில் தான் கடந்த இரண்டு வருடமாக அந்த சிறுமிக்கு பேன் தொல்லை ஏற்பட்டுள்ளது. தலை முழுக்க பேன் நிரம்பி உள்ளது. இதில் தலையில் சிறு சிறு காயங்கள் ஏற்பட்டு, அதில் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் முகத்திலும் அந்த தொற்றுகள் பரவி, முகம் முழுக்க பாதிக்கப்பட்டு உள்ளது. ஒரு கட்டத்திற்கு மேல் அவர் முகத்தை பார்க்கவே முடியாத நிலைக்கு மோசமாகி உள்ளது.

ஆனால் அந்த சிறுமியின் தாயார் சான்ட்ரா, சிறுமியை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை. மாறாக இவர் தனது பாய் பிரண்ட்டுடன் வேறு வீட்டில் வசித்து வந்து இருக்கிறார். சிறுமியின் பாட்டி எலிசபெத்தும், சிறுமி உடல்நிலை மோசமாக இருப்பது தெரிந்தும், எதுவும் செய்யாமல் அமைதியாக இருந்துள்ளார்.

இது தொடர்பான வாட்ஸ் ஆப் சாட்டுகளும் வெளியாகி உள்ளன. அதில் சான்ட்ரா தனது காதலனிடம் என் மகளுக்கு தலை முழுக்க பேன். முகம் மோசமாகிவிட்டது. ஆனால் அவரை மருத்துவமனை கொண்டு செல்ல முடியாது. எனக்கு நேரமில்லை. அந்த தலையோடு அவளை அழைத்துக்கொண்டு யார் மருத்துவமனை செல்வார் என்று சான்ட்ரா குறிப்பிட்டுள்ளார். இன்னொரு சாட்டில் பாட்டி எலிசபெத்தும் இதே போல குறிப்பிட்டு இருக்கிறார்.

இரண்டு பேரும் சிறுமியின் உடல் நிலை மோசமாகிறது என்று தெரிந்தும் சிறுமியை மருத்துவமனை அழைத்து செல்லவில்லை. இந்த நிலையில், முகம் முழுக்க இன்பெக்சன் பரவிய நிலையில். முகம் வீங்கி.. அந்த சிறுமி சமீபத்தில் வாந்தி எடுத்துள்ளார். அவர் ரத்த வாந்தி எடுத்து வயிற்று போக்கால் அவதிப்பட்டு இருக்கிறார்.

உடல்நிலை மோசமான நிலையில் வீட்டிலேயே அவர் பலியாகிவிட்டார். இந்த நிலையில் உடனே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்தனர். எப்படி இறந்தார் என்று விசாரணை நடத்தப்பட்டது. அதோடு வாட்ஸ் ஆப் சாட்டுகள் மூலம், அந்த சிறுமியின் அம்மா, பாட்டி இருவரும் விஷயம் தெரிந்தும் மருத்துவமனைக்கு சிறுமியை அழைத்து செல்லாமல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து இரண்டு பேரும் கைது செய்யப்பட்டு. அவர்கள் மீது முதல் டிகிரி கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading