பொதுக் கூட்டணி- ரணில், சஜித், சந்திரிகா கலந்துரையாடல்!
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர் அடுத்த பொதுத் தேர்தலில் பொதுக் கூட்டணியில் போட்டியிடுவது தொடர்பாக இன்று தனித்தனியாக கலந்துரையாடியுள்ளனர்.
நிட்டம்புவ பிரதேசத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் ஜனாதிபதித் தேர்தலில் தமக்கு ஆதரவளித்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் ரணில் விக்கிரமசிங்க கொழும்பில் உள்ள அவரது இல்லத்திலும், சஜித் பிரேமதாச கொழும்பில் தனது கட்சி உறுப்பினர்களுடன்னும் இந்தக் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்

You must be logged in to post a comment.