Local

எம்.பிக்களின் அராஜக நடவடிக்கை: பொலிஸ்மா அதிபரிடம் முறைப்பாடு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபையில் அரங்கேற்றிய அராஜக நடவடிக்கைகள் குறித்து பொலிஸ்மா அதிபரிடம் முறையிடுவதற்கு சட்டத்தரணிகள் சிலர் தயாராகி வருகின்றனர்.

எதிர்வரும் நாட்களில் இந்த முறைப்பாட்டை செய்யவுள்ளதாக சட்டத்தரணி சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்துக்கான சட்டத்தரணிகள் என்ற பெயரில் கொழும்பில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகைமைகள் குறித்து ஆராய்வது அவசியம் என்றும், நாடாளுமன்றத்துக்கு மக்கள் பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும்போது பொதுமக்கள் முன்பை விட தெளிவாக இருக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Discover more from Puthusudar

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading